2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது வருட நிறைவையொட்டி ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்காக நடத்தப்படும் கரப்பந்தாட்டப் போட்டியில்  யாழ் மாவட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் நேற்று முற்பகல் 10.20 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் செனவிரத்தனா, பிரதி அமைச்சர் டயான் பெரரா மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், உதவிப் பிரதேச செயலாளர்களினால் மாலைகள் அணிவிக்கப்பட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள்.

தேசியக் கொடியினை அமைச்சர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டக் கொடி என்பவற்றினை பிரதி அமைச்சர் அரசாங்க அதிபர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டாக்கள்.

alt

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .