2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

புனித நோன்புப் பெருநாளையொட்டி புத்தளம் மாவட்டத்தின் விருதோடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டியொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் எஸ். எச். எம். முஸம்மில் தெரிவித்தார்.

விருதோடை முஸ்லிம் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டியில் வழமையான பல்வேறு போட்டிகளுடன், விஷேட அம்சங்களாக சுப்பர் மோட்டர் குரோஸ், சகல வர்க்கங்களுக்குமான மோட்டார் சைக்கில்கள் ஓட்டப்போட்டி, முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி மற்றும் மாட்டு வண்டி ஓட்டப் போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளதுடன், பெறுமதியான பரிசுகளும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை பிரதேசசபை உறுப்பினர் முஸம்மில் தலைமையிலான இளைஞர்கள் குழு மேற்கொண்டு வருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .