2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

வில்லியம் வீரசிங்கம் றக்பி போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வில்லியம் வீரசிங்க கேடயத்திற்கான றக்பி போட்டி நேற்று சனிக்கிழமை மாலை கண்டியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றி பெற்று கேடயத்தை வென்றது.

கண்டி போகம்பற மைதானத்தில் ஒன்பதாவது வருடமாக நடைபெற்ற போட்டியில் 19-3 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி தர்மராஜ கல்லூரியை கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றிகொண்டது.

இப்போட்டியின் இடைவேளையின்  போது 14-3 என்ற அடிப்படையில் கிங்ஸ்வூட் கல்லூரி முன்னிலையை பெற்றிருந்தது.
அதன்பின் கிங்ஸ்வூட் கல்லூரி ஐந்து புள்ளிகளை பெற்றுக் கொண்டது.

கிங்ஸ்வூட் கல்லூரி 2 கோல், 1 ட்ரை மூலம் 19 புள்ளியையும் தர்மராஜ கல்லூரி 1 பெனல்ட்டி மூலம் 3 புள்ளிகளையும் பெற்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .