2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான கால் பந்து போட்டியில் சிலாபம் ஆனந்தா கல்லூரி

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை கால் பந்து சம்மேளனம் பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்துடன் நடத்திய 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் சிலாபம் ஆனந்தா கல்லூரி சம்பியனாகியது.  

திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

21 பாடசாலை அணிகள் 7 குழக்களாக பிரந்து இச்சுற்றுப் போட்டிகளில் பங்கு கொண்டன. இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மன்னார் புனித சவுரியார் ஆண்கள் பாடசாலையை எதிர்த்து சிலாபம் ஆனந்தா கல்லூரி மோதியது. போட்டி முடிவடையும் வரை 2 அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.  வெற்றியை தீர்மானப்பதற்கு பெனால்டி உதைகள் வழங்கப்பட்டது.

இதில் ஆனந்தா கல்லூரி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனானது.

இந் நிகழ்வில் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இச்சுற்றுப் போட்டியில் சிறந்த கொல் காப்பாளராக மன்னாரில் பிரான்சிஸ் சவுரியார் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த பெர்ணாடோ  அனோஜன் தெரிவு செய்யப்பட்டார். இதில்  சிறந்த வீரராக சிலாபம் ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த மத்திய கள வீரர்  லக்ஷான் பெரோ தெரிவு செய்ப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .