2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைக்கு டயலொக் தொடர்ந்தும் அனுசரணை

Janu   / 2023 ஜூலை 27 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் அனுசரணையிலான இலங்கை தேசிய வலைப்பந்து அணி, 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் உலகக் கிண்ண வலைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளது.

‘C ’பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை அணி,  ஜமைக்கா, போட்டியை நடத்துகின்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வேல்ஸ் போன்ற பிரபல அணிகளிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி இம் முறை 11 ஆ வது உலகக் கிண்ண வலைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றது,  1963 ஆம் ஆண்டு ஈஸ்ட் போர்னில் நடைபெற்ற போட்டிகளின் போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணி 9 வது இடத்தை ப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 நான்கு வருடங்களுக்கு முன்னர் லிவர்பூலில் நடைபெற்ற போட்டிகளில் 15 ஆ வது இடத்தை இலங்கை அணிபிடித்திருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .