Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 நவம்பர் 04 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது என்று கல்லூரி அதிபர் மயில்வாகனம் சுந்தரராஜன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகள், விபுலானந்த மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இப்போட்டியில், கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆக அம்பாறை மாவட்டம் சார்பில் நான்கு அணிகள் மாத்திரமே கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் காரைதீவு விபுலானந்தா அணியும், அம்பாறை டிஎஸ். சேனநாயக்க அணியும் மோதின.
இப்போட்டிகளில் 4-1 என்ற ரீதியில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ். சேனநாயக்கா கல்லுாரி அணியினரும், இரண்டாமிடத்தை விபுலானந்த மத்திய கல்லூரி அணியினரும் பெற்றுக் கொண்டனர்.
வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதல் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற எஸ்.சு ஜாந்த் தலைமையிலான விபுலானந்தா அணியை தினமும் பயிற்றுவித்த காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணியினருக்கும், என்னோடு தோளோடு தோள் நின்று அணியை நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர்களான சுலக்ஸன் லோகதாஸ் ஆகியோருக்கும், வழிப்படுத்திய அதிபருக்கும் நன்றி கூறுவதாக கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயநாதன் சோபிதாஸ் தெரிவித்தார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago