Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

கற்பிட்டி ஸ்லேபிங் கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 11 வீரர்கள் கொண்ட விலகல் முறையிலான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் விக்டர் ஜூனியர் சம்பியனானது.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்ற புத்தளம் மாவட்டத்தின் தலைசிறந்த 30 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாலக்குடாவை வென்று ஜூனியர் சம்பியனாயிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜூனியர்ஸ் முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாலக்குடா 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு, 59 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஜூனியர்ஸ் 4.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக சப்னி தெரிவானார்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025