2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம்

எஸ்.எம்.அறூஸ்   / 2019 ஜூன் 24 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் சம்பியனான நிலையில், இரண்டாமிடத்தை அஸா விளையாட்டுக் கழகம் பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ். முகம்மது ரஸ்ஸான் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பண்டார கலந்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 18 விளையாட்டுக் கழங்கள் பங்குபற்றிய இவ்விளையாட்டுப் போட்டியில் ஒன்பது தங்கப் பதங்களையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், நான்கு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவாகியிருந்தது.

நான்கு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று அஸா விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.

அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக ஒன்பதாது தடவையாகவும் அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு விழாவில் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வாக இடம்பெற்ற கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டியில் அக்கரைப்பற்று தெரிவு அணியும், இறக்காமம் தெரிவு அணியும் விளையாடியது. இப்போட்டி 1 -1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இங்கு வெற்றிபெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .