Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 01 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
மறு கேப்பிட்டல் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பருவகாலத்திலும் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
மருதமுனை ஸம்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட 16 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்ட இத்தொடரின் முதலாவது குழு நிலைப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் தனது குழுவில் மோதிய சகல அணிகளையும் வீழ்த்தி பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
மறுமுனையில் இரண்டாம் குழு நிலை போட்டியில் தனது குழுவில் போட்டியிட்ட சகல அணியினரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற மருதமுனை மறு கேப்பிட்டல் அணி இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்துடன் மோதியது.
நேற்று மாலை மருதமுனையில் நடைபெற்ற இவ்விறுதிப் போட்டியில் மறு கேப்பிட்டல் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம், ஏழு ஓவர்கள் முடிவில் 41 ஓட்டங்களையே பெற்றனர். பதிலுக்கு 42 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மறு கேப்பிட்டல் 38 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
9 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago