Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் நகரின் சமூக நலன்புரி அமைப்பான பங்கூஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த அணிக்கு ஐந்து பேரைக் கொண்ட புட்சால் கால்பந்தாட்டத் தொடரில் பொஸிட்டிவ் சாஹிரா சம்பியனானது.
புத்தளம் வெஸ்டன் சோல்டன் வீதியில் அமைந்திருக்கின்ற சேவிஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 15 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு கோப்ரா, பொஸிட்டிவ் சாஹிரா, ஜோக்கர் கிங்ஸ், சாஹிரா ஓரியன்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகின.
இதிலிருந்து இறுதிப் போட்டியில் ஜோக்கர் கிங்ஸை வென்று பொஸிட்டிவ் சாஹிரா சம்பியனானது.
சம்பியனான பொஸிட்டிவ் சாஹிரா அணிக்கு 10,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு சாஹிரா ஒரியன்ஸ் அணிக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
சகல போட்டிகளுக்கும் நடுவர்களாக முஹம்மது ரிசாத், முஹம்மது பௌசான் ஆகியோர் கடமையாற்றினர்.
தொடருக்கு பிரதான அணுசரனையை புத்தளம் ஷங்கர் மீடியா, நுஹா டிம்பர் ஹவுஸ், நியூ ச்சொய்ஸ் டெக்ஸ், நியூ ஷைன் ஆகிய நிறுவனங்கள் வழங்கி இருந்தன.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago