Shanmugan Murugavel / 2021 மார்ச் 11 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- தீஷான் அஹமட்
மூதூர் - சேனையூர் பகுதியில் ஆரம்பமாகவுள்ள சேனையூர் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, சேனையூர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக இன்று ஆரம்பமானது.
இத்தொடரில் ஐந்து அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப நிகழ்வின்போது தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. விழா ஆரம்பத்தின்போது, தொடரில் பங்குபற்றும் அணிகளின் சீருடை அறிமுகம், வெற்றிக் கிண்ணம் அறிமுகம் போன்றனவும் இடம்பெற்றன. அத்தோடு அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே. ஜனார்த்தனன் கலந்து கொண்டார்.ஏனைய அதிதிகளாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி ஜெயமாலா, திருவாளர் ஜெகன் மற்றும் ஊர்பிரமுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago