Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

தெற்காசிய கராத்தே சம்மேளனத்தால் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கைக்கு 16 தங்கப் பதக்கங்களும், 20 வெள்ளிப் பதக்கங்களும், 27 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 63 பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன.
இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பை சேர்ந்த துஷ்யந்தன் என்னும் மாணவன் 21 வயதுக்குட்பட்ட 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர், கடந்த 2015ஆம் ஆண்டில் முதன்முதலாக பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றதன் மூலம் தனது முதலாவது தேசிய பதக்கத்தைப் பெற்றதோடு, அதன் பின்பும் தேசிய பதக்கத்தைப் பெற்று இறுதியாக சர்வதேச பதக்கத்தை பெற்றுள்ளார்.
30 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
49 minute ago
2 hours ago