2025 மே 01, வியாழக்கிழமை

நியூசிலாந்து ரக்பி அணி இலங்கைக்கு

Janu   / 2025 மே 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து 85 கிலோகிராம் எடைக்கு குறைந்த ரக்பி அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

28 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

குறித்த அணி புதன்கிழமை (30) இரவு 10.40 மணிக்கு ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அவர்கள் இலங்கை தேசிய ரக்பி அணிக்கு எதிராக மே 04 ஆம் திகதி கண்டி ,  நித்தவெல மைதானத்திலும், மே 10 ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

டீ.கே.ஜீ. கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .