Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
கல்வியமைச்சால் இரத்தினபுரி உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடாத்தப்பட்ட அகில இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தைக்குவாண்டோ போட்டியில் கல்முனை சாஹிராக் கல்லூரியின் ஜே.ஏ. சுரைப் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஸ்பாரிங்க் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவ்வெற்றியைப் பெற உதவிகளையும் மாணவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரி அதிபர் ஜனாப் எம்.ஐ. ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸில், அர்ப்பணிப்புடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் யூ.எல்.எம். இப்றாஹிம், உதவி பயிற்றுவிப்பாளர்களான ஏ.பி.ஏ. ஸிஹாப், எம்.எச்.ஏ. ஹஸீன், ஏ.பி.ஏ. ஹம்தாத், ஜே.ஏ. சுமைத், ஏ.எல்.ஏ.எம். அப்ரி,ஏ.பி.ஏ. ஹமீம், விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீர், உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago