Shanmugan Murugavel / 2024 நவம்பர் 21 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சேர். ஜோன் டார்பட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 12 வயதுக்குட்பட்டோருக்கான 80 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முஹம்மட் ஹாரிஸ் முஹம்மத் ஹின்ஸான் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் போட்டித் தூரத்தை 11 செக்கன்களில் ஹின்ஸான் கடந்திருந்தார்.
ஹின்ஸானை வாழ்த்துவதோடு, இவரைப் பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கும் இவரது பெற்றோருக்கும் அஷ்ரக் சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
26 minute ago
29 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
4 hours ago
5 hours ago