2021 மே 11, செவ்வாய்க்கிழமை

மேசைப்பந்துப்போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

 

கனிஷ்டப் பிரிவுகளுக்கான தெற்காசிய மேசைப் பந்துபோட்டி, விளையாட்டத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை மேசை பந்து சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனக ஹேரத் ஆகியோரின் தலைமையில், கல்கிசை சாந்த ஜோசப் வித்தியாலயத்தின் உள்ளக விளையாட்டரங்கில், இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இப்போட்டிகள் எதிர்வரும் 20,21 ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

 

இப்போட்டிகளில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்;தான், நேபாள், மாலைத்தீவு அகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 15 வயதுக்கும் கீழ் மற்றும் 18 வயதுக்கும் கீழ் ஆண்,பெண் இருபாலரும்; பங்குபற்றுகின்றனர்.

மேற்படி நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை மேசை பந்து சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனக ஹேரத், இலங்கை மேசைப் பந்து சங்கத்தின் செயலாளர் கசுன் உதார விதான, தெற்காசியா கனிஷ்ட பிரிவுகளுக்கான மேசை பந்து போட்டி அமைப்பாளர் சந்தன பெரேரா, கொழும்பு மாநகர சபையின் விளையாட்டுத்துறை சம்பந்தமான திணைக்களத்தின் பணிப்பாளர் சாலிகா மற்றும் இலங்கை மேசை பந்து சங்கத்தின் பொருளாளர் எம்.பிரேமதாச உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X