2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

க. அகரன்   / 2019 ஜூன் 22 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா றம்பைவெட்டி பிளேபோய்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானால் அண்மையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கே. காதர் மஸ்தானின் விசேட நிதியிலிருந்து வன்னி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே றம்பைவெட்டியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து பிளேபோய்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபதவிசாளர் சு. குமாரசுவாமி, பிரதேச சபை உறுப்பினர் ஜே. திரவியவதனி, நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக உதவியாளர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X