Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் கடந்த நிர்வாகத்தால் நடாத்தப்பட்ட புள்ளிகள் அடிப்படையிலான தொடரில் வென்ற அணிகளுக்கு வழங்கப்பட இருந்த பரிசுத் தொகையை புதிய கால்பந்தாட்ட லீக் வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக அதன் தலைவர் முஹம்மது யமீன் தெரிவித்தார்.
லீக்கின் முன்னைய நிர்வாகத்தால் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக புள்ளிகள் அடிப்படையிலான போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
எனினும் அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு இதுவரையும் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையை சரி செய்ய, தற்போதைய புதிய நிர்வாகம், அனைத்து பங்குபற்றிய அணிகளுக்கும் உரிய பரிசுத்தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.
புள்ளிகள் அடிப்படையிலான தொடரில் சம்பியனாகிய லிவர்பூல் அணிக்கு 100,000 ரூபாயும், இணை இரண்டாமிடங்களை பெற்ற நியூ ஸ்டார்ஸ் மற்றும் விம்பிள்டன் அணிகளுக்கு தலா 50,000 ரூபாயும், மூன்றாமிடம் பெற்ற போல்டன் அணிக்கு 25,000 ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளதாக யமீன் தெரிவித்தார்.
இது தவிர லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 கழகங்களில் இந்த நான்கு கழகங்களை தவிர மிகுதி எட்டு கழகங்களுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளதாகவும் யமீன் மேலும் குறிப்பிட்டார்.
இந்த பரிசுத் தொகைகளை வழங்கி வைக்கும் பொருட்டு விஷேட கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டி ஒன்று கூடிய விரைவில் இடம்பெற இருக்கின்றது. இந்த கண்காட்சி போட்டியிலே மேற்கண்ட தொடரிலே சம்பியனாகிய லிவர்பூல் அணியும் லீக் அணியும் கலந்து கொள்ள இருக்கின்றன.
12 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago