Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் மற்றும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் எஸ்.என்.எல். அப்துல்லா அவர்களின் ஞாபகார்த்தமான "மர்ஹூம் அப்துல்லா வெற்றிக்கிண்ண" கால்பந்தாட்ட தொடரின் ஆட்டம் ஒன்றிலேயே நியூ ஸ்டார்ஸ் அணி இந்த வெற்றிதனை அடைந்துள்ளது.
இந்த தொடரின் இரண்டாவது காலிறுதிக்கான இந்தப் போட்டி, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் இந்த இரு அணிகளுமே அதி சிறந்த அணிகளாக கருதப்படுபவை. பல வெற்றிக்கிண்ணங்களை இரு அணிகளுமே சுவீகரித்த அணிகள்.
போட்டி நிறைவு பெறும் வரையிலும் இரு அணிகளும் கோல் போட எத்தனித்தும் கோல் போட முடியாமல் போனதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்க பிரதம நடுவர் தண்ட உதைக்கு அழைப்பு விடுத்தார். தண்ட உதையில் நியூ ஸ்டார்ஸ் அணியானது 3 -2 கோல்களினால் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம். கியாஸ், ஏ.எம். சபீக் மற்றும் எம்.சர்ஜுன் ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago