2025 நவம்பர் 19, புதன்கிழமை

உதய ஒளி விளையாட்டுக்கழகத்தின் 4ஆவது ஆண்டு நிறைவு

Thipaan   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்  


மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பன்சேனை உதய ஒளி விளையாட்டுக் கழகம் தனது நான்காவது ஆண்டு நிறைவையொட்டி, பன்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு (11, 12) ஆகிய இரு தினங்களும் நடைபெற்றன.

இதில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகமும்  முனைக்காடு இராமகிருஷ்ணா அணியும் மோதின.
இப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

இறுதி நிகழ்வில் பன்சேனை பாரி வித்தியாலய அதிபர் வ.சுந்தரநாதன், முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X