2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உடற்பயிற்சியில் யாழுக்கு 2, 3 ஆம் இடங்கள்

Super User   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


இலங்கைப் பாடசாலை 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

கொழும்பு வியாங்கொட சியான ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மைதானத்தில் சனிக்கிழமை (06) உடற்பயிற்சி போட்டிகள் இடம்பெற்றன.

இதில் வடமாகாண பாடசாலைகள் ரீதியில், முதலாம் இடம்பெற்ற ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அணியும், இரண்டாம் இடம்பெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியும் பங்குபற்றின.

இதில், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

மேற்படி பாடசாலைகள், கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .