Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், எஸ்.மாறன்)
மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் முதல்த் தடவையாக இடம்பெற்ற 'பெட்டில் ஒப்த எவ்ரஸ்ட் 50' ஓவர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நகர்ப் பாடசாலையை மட்டும் மையமாக கொண்டு இடம்பெற்று வந்த கடினபந்து மாபெரும் கிரிக்கெட்போட்டிகள் முதல்த் தடவையாக மாவட்டத்துக்கு வெளியே மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளில் கடினபந்து கிரிக்கெட் அணியை தன்னகத்தே கொண்டுள்ள பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியானது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல்நிலை பாடசாலை அணிகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியுடன் மோதியது.
இந்த நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.
இதனடிப்படையில் பெரியகல்லாறு மத்தியகல்லூரி அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து தற்போது துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி 37 ஓவர்களை சந்தித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்த 'பெட்டில் ஒப்த எவ்ரஸ்ட்'50 ஒவர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியானது இரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு பெரியகல்லாறிலும் அடுத்த ஆண்டு மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட 234ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுதந்த திலகரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான ரவீந்திர புஸ்பகுமார, லங்கா டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
20 minute ago
52 minute ago
2 hours ago
Anwer Noushard Sunday, 28 August 2011 09:04 PM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago
2 hours ago