Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 20 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி விளையாட்டுக் கழகத்திற்கும் இராணுவ அணிக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற றகர் போட்டியில் 51 - 06 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம் அமோக வெற்றி ஈட்டியது.
கண்டி, நித்தவலை றகர் மைதானத்தில் இன்று நேற்று மாலை இடம்பெற்ற இப்போட்டியில் முதற்பகுதி முடிவின் போது 24 - 03 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டுக் கழகம் முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாம் பகுதியின் மிகவும் திறமையாக விளையாடிய கண்டி விளையாட்டுக் கழக அணி, போட்டி முடிவின் போது 51 புள்ளிகளை பெற்றதுடன் இராணுவ அணியினர் 06 புள்ளிகளை மட்டுமே பெற்றனர்.
கண்டி விளையாட்டு அணியினர் தனது 51 புள்ளிகளுக்காக ஆறு ட்ரைகளும் மூன்று கோல்களும் பெற்றனர். இராணுவத்தினர் தனது ஆறு புள்ளிகளுக்கு இரண்டு பெனல்டிகள் அடங்கும்.
கண்டி விளையாட்டு அணி சார்பில் ரோஷான் வீரரத்ன, பஸீல் மர்ஜா, சஜித் சாரங்க, சங்ஜீவ ஜயசிங்க ஆகியோரும் இராணுவ அணி சார்பில் கபில லோஷானும் புள்ளிகளை பெற்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago