2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு  மாகாண  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை  வெபர் மைதானத்தில் ஆரம்பமான இந்த விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்றன.  

திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை அம்பாறை  ஆகிய மாவட்டங்களிலுள்ள 140 பாடசாலைகளைச் சேர்ந்த 960 மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர்.

ஆண்களுக்கான போட்டிகளில்  கல்முனை மாவட்டம் 264 புள்ளிகளையும்  மட்டக்களப்பு மாவட்டம்; 208 புள்ளிகளையும் திருகோணமலை மாவட்டம் 233 புள்ளிகளையும் அம்பாறை மாவட்டம் 81 புள்ளிகளையும் பெற்றது. பெண்களுக்கான போட்டிகளில் அம்பாறை மாவட்டம் 285 புள்ளிகளையும் மட்டக்களப்பு மாவட்டம் 187 புள்ளிகளையும் திருகோணமலை மாவட்டம் 113 புள்ளிகளையும் கல்முனை  மாவட்டம் 72 புள்ளிகளையும் பெற்றது.

ஆறு வயதுடையவர்களுக்கான பிரிவுகளில் 140 போட்டி  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மட்டக்களப்பு மாவட்டம் 391 புள்ளிகளையும் அம்பாறை மாவட்டம் 366 புள்ளிகளையும் கல்முனை மாவட்டம் 336 புள்ளிகளையும்  திருண்குக்ணமலை மாவட்டம் 244 புள்ளிகளையும் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X