2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

Kogilavani   / 2011 ஜூலை 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.ற்ம்ஸான்)
மாவடிப்பள்ளி    'வெற்றிப் பெற வேண்டும்' (will to win) விளையாட்டுக்கழகத்தின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 8 பேர்  கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை றியல் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம்  2.4  ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இறுதிப்போட்டிக்கு மாவடிப்பள்ளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்  யாக்கூப் ஏ. ஹஸன் பிரதம அதிதியாகவும் , மாவடிப்பள்ளி அஸாம் கோ நிறுவன பணிப்பாளர் மஹ்முத் ஏ. மஜீட் மற்றும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர்  ஏ. நிஸாந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X