Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 26 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை மெய்வன்மைச்சங்கம் பெண்களுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய தடகளப் போட்டிகளில் வடமாகாண வீராங்கனைகள் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு தியகமவில் அமைந்துள்ள ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அகில இலங்கை ரீதியாக வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரி.அனுசா பெண்களுக்கான திறந்த போட்டியில் கலந்து கொண்டு தட்டெறிதலில் 43.50 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
18 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.தர்சினி குண்டெறிதலில் 9.32 மீற்றர் எறிந்தும் தட்டெறிதலில் 27.26 மீற்றர் எறிந்தும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
3000 மீற்றர் வேகநடைப் போட்டியில் வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய வீராங்கனை 17:18 செக்கனில் நடந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
யாழ். மாவட்டத்தைத் சேர்ந்த அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீராங்கனைகளான அருந்தவம் பவித்திரா 2.60 மீற்றர் இராசதுரை காவேரி 2.50 மீற்றர் ஆகியோர் முறையே 20 வயதுப் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
51 minute ago
52 minute ago