2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மட்டு. தேசிய கல்வியற் கல்லூரியின் விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2011 ஜூலை 29 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று வியாழக்கிழமை மாலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் கல்வியமைச்சின் ஆசிய கல்விப்பிரிவுக்கான பிரதம ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவிதான, கல்வியமைச்சின் பணிப்பாளர் டபிள்யூ.ஆர்.பி.சில்வா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட அதிகாரிகள் கல்லூரியின் விரிவுரையாளர்கள், உபபீடாதிபதிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்களின்  மெய்வல்லுனர் போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி, வினோதஉடை, பேண்ட் வாத்தியம் என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X