2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் முபோ வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2011 ஜூலை 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அணிக்கு 15 ஓவர்களைக் கொண்ட முபோ வெற்றிக் கிண்ண பென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று பிற்பகல் சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் முபோ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அலி பெரோஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், விசேட அதிதிகளாக சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.அபூபக்கர், சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம்.பைசால் அமீன், கெப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் கமீல் இம்டாட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் சம்மாந்துறை யுனிட்டி,  எஸ்.எஸ்.சி அணிகள் விளையாடின. இதில் யுனிட்டி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி. அணி ஐந்து விக்கட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து சமப்படுத்தியதால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. அதன்பின்னர் நாணயச் சுழற்சி மூலம் எஸ்.எஸ்.சி. அணி வெற்றி பெற்றதனையடுத்து கிண்ணத்தினை சுவிகரித்துக் கொண்டது.

இச்சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 18 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X