2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு வைபவம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

துறைநீலாவணை ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய 10 ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணையில் இடம்பெற்றது.

இதன்போது சுற்றுப் போட்டியை வெற்றி கொண்ட பாண்டிருப்பு யூத் கழகத்துக்கான சம்பியன் கிண்ணத்தை ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் கே. நவநீதன் வழங்கிவைத்தார்.

போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட பெரிய நீலாவணை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கான வெற்றிக் கிண்ணத்தினை ஊடகவியலாளர் நடன சபேஷன் வழங்கினார்.

மேற்படி கிறிக்கட் சுற்றுப் போட்டியானது ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் கே.வேல்ராஜின் தலைமையில் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் 14 அணிகள் பங்கு கொண்டிருந்தன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X