2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முப்பது வருடங்களின் பின் மன்னாரில் வடமாகாண விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

சுமார் முப்பது வருடங்களின் பின்னர் வடமாகாண விளையாட்டு விழா மன்னார் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் முருங்கன் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில்  இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் வடமாகாண விளையாட்டு விழா நடைபெறுகிறது.

வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆரம்பமான இன்றைய நிகழ்வில்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் கலந்துகொண்டார்.

நாளைய விளையாட்டு விழாவில்  அதிதிகளாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் ரிஸாட் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X