2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மட்டக்களப்பு பெரியகல்லாறில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்குமிடையில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கிரிக்கட் போட்டிக்கு இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்களான ரவீந்திர புஸ்பகுமார, லங்கா டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் கே.நல்லதம்பி தலைமையில் நடைபெறும் இப்போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், பட்டிருப்பு கல்வி வலயக்  பணிப்பாளர் என்.புள்ளைநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X