2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாற்றுவலு சிறார்களிற்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 

இலங்கை மெதடிஸ்த திருச்சபையினால் நடாத்தப்படும் புகலிடம் நிறுவனத்தின் மாற்றாற்றல் உள்ள சிறார்களிற்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.

தொடர்ந்து இரு தினங்கள் நடைபெற்றுவந்த இந்நிகழ்வின் இறுதிநாளான நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் விஜயதிலக,  கிழக்கு மாகாண சமூக சேவைப் பணிப்பாளர் மணிவண்ணன், வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபை  முகாமைக்குரு அருட்திரு. பு.யு. சதீஸ், கோட்டைமுனை மெதடிஸ்த திருச்சபை முகாமைக்குரு, அருட்திரு  சாம் சுவேந்திரன், புகலிடம் பதில் பணிப்பாளர்  ரி.டி.நிதர்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Amal Saturday, 06 August 2011 10:48 PM

    நன்றி இதை வெளியிட்டமைக்கு..அமல் புகலிடம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X