2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண விளையாட்டு விழா நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

சுமார் முப்பது வருடங்களின் பின்னர் வடமாகாண விளையாட்டு விழா மன்னார் மாவட்டத்திலுள்ள முருங்கன் மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் இடம்பெற்றன.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலநூற்றுக்கணக்கான வீர வீராங்கனைகளும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன்,  வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இவ்விளையாட்டு விழாவிற்கு அதிதிகளாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாணத்தில் இடம்பெறும் 05ஆவது வடமாகாண விளையாட்டு விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X