2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மெய்வன்மைப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால், வடமாகாணப் பாடசாலைகளிலிருந்து அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்படவுள்ள மெய்வன்மைப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகளுக்கான வதிவிடப் பயிற்சிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாகாண மட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இவர்களுக்கான பயிற்சிகளை  தென்னிலங்கையிலிருந்து வரும் பயிற்றுவிப்பாளர்களுடன் உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களும் வழங்கவுள்ளனர்.

கடந்த வருடம் இத்தகைய பயிற்சிகள் இறுதி நேரத்தில் வழங்கப்பட்டதன் மூலம் வடமாகாணப் பாடசாலைகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 17 பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X