2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு மாவட்ட படுவான்கரை பிரதேசத்துக்கு உட்பட்ட விளையாட்டுக் கழங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
 
22 வளையாட்டுக் கழகங்கள் பங்கு கொண்ட இந்த சுற்றுப்போட்டி பட்டிப்பளை, அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டது.
 
இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசடித்தீவு ஆலய மைதானத்தில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ச.வேந்தராசா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
 
நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடுமையான மோதலின் பின் தண்டனை உதையின்போது அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.
 
இறுதி நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிறப்பு அதிதியாக பட்டிப்பளை தவிசாளர் த.பேரின்பராசா, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், பட்டிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X