2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தெரிவு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடத்திய தரம் 10 மாணவர்களுக்கான 8ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான சுந்தரேஸ்வரன் வித்யாசாகர் மற்றும் ஆனந்தராஜா ஹரிசங்கர் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் தென்னாபிரிக்கவின் டேபன் மாநகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 300 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X