2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தடகளப்போட்டி பயிற்சிக்காக அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவர்கள் இருவர் தெரிவு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள கனிஷ்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகளில் வீர, வீராங்கனைகளுக்கான தேசிய மட்டத்திலான பயிற்சிகளில்  யாழ்ப்பாணம், அளவெட்டி அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  
அளவெட்டி அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த வீரன் பி.லவன்யன் மற்றும் எ.பௌத்திரா ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கான  கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயிற்சி பெறவுள்ளனர்.

இவர்கள் இருவரும் பாடசாலை மட்டத்திலான மாகாணப் போட்டிகள் மற்றும் தேசியமட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X