2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நோன்புப் பெருநாள் கரப்பந்து சுற்றுப் போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வன்னி மாவட்டத்தில் உள்ள கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொள்ளும் நோன்பு பெருநாள் கரப்பந்து சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் மன்னார் முசலி தம்பட்டை முதலியார் கட்டு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்துக்கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசில்களை வழங்கி வைப்பார்.

அதேவேளை தம்பட்ட முசலி அணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தலைமை தாங்கி போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X