2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிபர்ட் கேடய றக்பி தொடரில் கண்டி விளையாட்டுக்கழகம் அரையிறுதிக்கு தகுதி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
'கிளிபர்ட் கேடய' கழகங்களுக்கிடையிலான றகர் தொடரில் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் கொழும்பு சீ.எச் அன்ட எப்.சீ கழகத்திற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கால் இறுதிப் போட்டியில் 28-13 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம வெற்றி ஈட்டியது.

கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் இடைவேளையின் போது 13-0 என்ற அடிப்படையில் கண்டி அணி முன்னிலை வகித்தது.

கண்டி அணி 5 ட்ரை, 1 பெனல்டி மூலம் 28 புள்ளிகளையும் சீ.எச். அணி 2 ட்ரை 1 பெனல்டி மூலம் 13 புள்ளிகளையும் பெற்றது. கண்டி அணி சார்பாக பாஸில் மரீஜா, மொகமட் ஜப்பார், ரொசான் வீரரத்ன, சஞ்சீவ ஜயசிங்க ஆகியோர் புள்ளிகளை பெற்றனர். சீ.எச் சார்பாக மொகமட் ரிப்கான். நிரோசன் ஏக்கநாயக்கா ஆகியோர் புள்ளிகளைப்  பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X