2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டு அமைச்சின் வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை விளையாட்டு அமைச்சினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்படவுள்ள 37ஆவது வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு தியகமவிலுள்ள ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் பிற்பகல் 5.20 மணிக்கு ஜனாதிபதி இதற்கான நிகழ்வுகளில் கலந்துகொண்டு போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில், வடமாகாணத்திலிருந்து 40 வீரர்களும் 38 வீராங்கனைகளுமாக 78 பேர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இன்று பகல் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரும் பெண்களுக்கான  5 ஆயிரம் மீற்றரும் ஓட்டப் போட்டிகள்,  பெண்களுக்கான முப்பாய்ச்சல், தட்டெறிதல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல்,  உயரம் பாய்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம், 800 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் தடைதாண்டல் தெரிவுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.  பிற்பகல் 5.20 மணிக்கு இடம்பெறும் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியும் 4தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, வடமாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகள் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இன்று  புதன்கிழமை அதிகாலை இரண்டு பஸ்களில் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.  இவர்களுடன்  வடமாகாண மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அலுவலர்களும் சென்றுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X