Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை மற்றும் இந்திய நட்புறவுச் சங்கத்தினால் இந்தியா, புதுடில்லியில் பாடசாலை அணிகளுக்கிடையே நடத்தப்படும் 19 வயதுப் பிரிவினர்களுக்கான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக யாழ். மாவட்ட பாடசாலைகளில் தெரிவான அணி யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இன்று புதன்கிழமை தமது முதலாவது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்கள் வருமாறு,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த கே.எரிக், பிரதாப், றிசாந்ரியூடா,எ.நோபேட, எம்.லிவிங்டன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.எட்வேட் எடின், எஸ்.ஜெரிக்துசாந், என்.கோகுலன், யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த கே.ஹரிவதனன், ஜெ.டக்சன், எ.ரஜிந்தன், கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கே.இராகுலன் என்.பங்குஜன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எம்.மதுசன், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.பிரியலக்சன்.
இவர்களுடன் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜி.கோபிகிருஷ்ணா முகாமையாளராகவும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரி.எஸ்.நிசாந்தன் பயிற்றுவிப்பாளராகவும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.குகன் பாடசாலைகளின் பிரதிநிதியாகவும் அணியுடன் சென்றுள்ளார்கள். இவர்களுக்கான போட்டி நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago