2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
 
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்கும்  சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா பாடசாலை முன்றலில் அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் தலைமையில்   நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் மற்றும் சாய்ந்தமருது பிரதேச  செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி,  கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்

இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள் அனைவரும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X