2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுப்பர் சிக்ஸ்ரின் கால்பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு வெற்றி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கொழும்பு சாஹிராக் கல்லூரியால் நடத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான சுப்பர் சிக்ஸ்ரின்  சுற்றுப்போட்டியில் 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனானது.

15 இலங்கைப் பாடசாலைகளுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த ஒரு பாடசாலையுமாக மொத்தம் 16 பாடசாலைகள் இந்தப் போட்டியில் மோதிக் கொண்டன.

இறுதிப்  போட்டியில் கொழும்பு வெஸ்லீக் கல்லூரியும் மானிப்பாய் இந்துக் கல்லூரியும்  கடும் போட்டி போட்டன. முதல் பாதி ஆட்டம் வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறமுடியாது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக மேலதிகமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் முதல் 3 நிமிட பாதி ஆட்டத்தில் ஒரு தண்டணை உதை கிடைக்கப்பெற சந்தர்ப்பத்தை  உரியமுறையில் பயன்படுத்திய மானிப்பாய் இந்து வீரர் யாழினியன் தனது அணிக்காக ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அடுத்த 3ஆவது நிமிடத்தில் யாழினியன் தனக்கு கிடைத்த பந்தை முன்நகர்த்தி அடித்து இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நிறைவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் கொழும்பு வெஸ்லீக் கல்லூரியை வெற்றி பெற்று  தேசிய மட்டத்திலான சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X