2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டிக்கான நிரல் ஒழுங்கு செய்யும் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையேயான கால்பந்தாட்டப் போட்டிக்கான நிரல் ஒழுங்கு செய்யும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள வலிகாமம் கல்வி வலயக் கேட்போர்கூடத்தில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலைகளின் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகளின் பொறுப்பாசிரியர்களை கலந்துகொள்ளுமாறு வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.நடராசா தெரிவித்துள்ளார்.  13, 16, 18 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான நிரல் ஒழுங்கு இதன்போது தயாரிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X