2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ்.வீரர்களை இனங்காணும் கிரீடா சக்தி

Kogilavani   / 2011 நவம்பர் 05 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
விளையாட்டு அமைச்சின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் கிரீடா சக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான சிறந்த வீர, வீராங்கனைகளை இனங்காணும்  நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட  பாடசாலை வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் இந்த நிகழ்வில் 14-18 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன.

இதில் வலைப்பந்து, கரப்பந்து, கபடி, கால்ப்பந்து, போன்ற விளையாட்டுக்களிலிருந்து சிறந்த வீர, வீராங்கனைகள் இனங்காணப்படவுள்னர்.
இனம்காணப்படும் வீர, வீராங்கனைகளுக்கு தொடர்ந்து 2018ஆம் ஆண்டுவரை பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன்மூலம் தேசிய அணிக்குள் அவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X