2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாவற்குழி மகா வித்தியாலம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தென்மராட்சி வலயமட்ட பாடசாலைகளின் 18 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் நாவற்குழி மகா வித்தியாலய அணி சம்பியனானது.

வரணி மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியை எதிர்த்து நாவற்குழி மகா வித்தியாலய அணி மோதிக்கொண்டது.

உற்சாகத்தோடு களமிறங்கிய இரு அணிகளும் கடும் போட்டி போட்டன. இருப்பினும் பின்கள வீரர்களின் சிறந்த ஆட்டத்தினால் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட முடியாது தடுமாற முதல் பாதி ஆட்டம் சமநிலையயில் முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெறுமுடியவில்லை. பின்னர் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க 5 சமநிலை தவிர்ப்பு உதைகள் வழங்கப்பட்டன.

இதில் நாவற்குழி மகா வித்தியாலயம் 5௪ என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி வலயமட்ட சம்பியனானது. இந்தப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X