2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. அணி வெற்றி

Kogilavani   / 2011 நவம்பர் 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மர்ஹூம் ஏ.எம்.றிபாட் ஞாபகார்த்த பென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஹஜ்ஜூப் பெருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.

16 ஓவர்களைக் கொண்ட இப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. அணி, கல்லரிச்சல் கிங்ஸ்லெவன் அணிகள் மோதிக்கொண்டன.
முதலில் துடிப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி. அணி ஆறு விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய கல்லரிச்சல் கிங்ஸ்லெவன் அணி சகல விக்கட்களையும் இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. அணியினர் முதலாம் இடத்தினையும்   சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ்லெவன் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநயக்கா, விசேட அதிதிகளாக ஜனாதிபதி செயலக இணைப்பாளர் ஏ.எல்.எம்.றசீன், கொப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X