2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய பிரிவு  3க்கான  போட்டியில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் கழகம்  வெற்றி பெற்றது.

திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை  யாழ்ப்பாணம் சிங்கிங் பிஷ் கழகத்திற்கும் ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.

இடைவேளை வரை எந்த அணிகளும் கோல்கள் போடாத நிலையில் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இடைவேளைக்குப் பின்னர் ஒலிம்பிக்ஸ் கழகத்தின் பின்வரிசை வீரர் பி.திலக்சன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தலையால் மோதி கோலினைப் பெற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் 10 நிமிட  நேரத்தில் மற்றொரு வீரர்   கோல் ஒன்றினை  போட்டார்.

ஆட்ட நிறைவில்  2க்கு 0 என்ற கோல் கணக்கில் திருகோணமலை ஒலிம்பிக்ஸ் கழகம் யாழ்ப்பாணம் சிங்கிங் பிஷ் கழகத்தை வெற்றி கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X