2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ். செயலக அணி வெற்றி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகம் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள்,  உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே இரண்டாவது ஆண்டாக  நடத்திய அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட போட்டியில்  யாழ். செயலக அணி அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்தை வென்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கல்வியங்காடு ஜீ.பி.எஸ்.விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் யாழ். மாவட்ட செயலக அணியும் மோதிக்கொண்டன.

இரு அணிகளும் போட்டி ஆரம்பமாகிய நேரம் முதல் இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இருப்பினும்  யாழ். செயலக மாவட்ட  அணி விளையாட்டு அலுவலர்களையும் உள்ளடக்கிய அணியாக காணப்பட்டமையால் எதிரணியினரின் பலவீனத்தை கருத்தில்க்கொண்டு விளையாடியதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 06 க்கு 02 புள்ளிகள் என்ற அடிப்படையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகியதும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி முதலில் புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் நின்ற போதிலும் மீண்டும் யாழ். செயலக மாவட்ட அணி தனது நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் 05க்கு 02 புள்ளிகள் என்ற நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட இறுதியில் யாழ். மாவட்ட செயலக அணி 11 க்கு 04 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதேவேளை, யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகம் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக யாழ். மாவட்ட விளையாட்டு அலுவலரும் யாழ். மாவட்ட செயலக வலைப்பந்தாட்ட அணியின் உறுப்பினருமான ஜே.எப்.எ.ரூபசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X