2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசிய விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.பரீட்)

கிழக்கு  மாகாண  விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை  திருகோணமலை லவ்லேனிலுள்ள ஜேகப் விடுதியில்  நடைபெற்றது.

37ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்டு  பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த வீர, வீராங்கனைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம.;எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்பை, பிரதி தவிசாளர் ஆரியவதி களப்பத்தி, அரசாங்க அதிபர் டீ.டீ.ஆர்.டீ. சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X